Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு… தகன மேடையில் ஊற்றிய பெட்ரோல்….11 பேர் படுகாயம்…!!!!

தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை தகனம் செய்த போது பெட்ரோல் ஊற்றியதால் திடீரென தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மராட்டிய மாநிலத்தில் புனே மாவட்டம் தடிவாலா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே (80).  இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அந்தபகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்குள்ள தகன மேடையில் தீபக் கும்ளேவின் உடலை வைத்து எரியூட்டினர்.
ஆனால் அவரது உடல் சரியாக எரியவில்லை என அருகில் நின்ற ஒருவர் எரிந்துகொண்டிருந்த சிதையில் பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதனால், சிதையில் இருந்து பயங்கர வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீ வேகமாக எரிந்ததால் தகன மேடை அருகில் இருந்தவர்கள் மீது தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதில், 11 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தீக்காயமடைந்த 11 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

Categories

Tech |