Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“27,389 நலவாரிய உறுப்பினர்கள்” 20.71 கோடி நிதி ஒதுக்கீடு…. பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள்….!!

3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்த விழாவில் கட்டுமான தொழிலாளர்களின் நலன் தலைவர் பொன்குமார் கலந்து கொண்டார். இவர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் மூலம் 27,389 பேர் பயன்பெறுள்ளனர். இதற்காக 20.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பொன்குமார் பேசினார். அவர் தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை எளிமைப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து 53 வகையான கட்டுமான தொழில்கள் மற்றும் 60 வகையான அமைப்பு சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமான  நல வாரியத்தில் 2,23,122 பேரும், ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 5,027 பேரும், ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 21,915 பேரும் பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் வாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் என 3 துறைகளிலும் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 3 நல வாரியங்களை சேர்ந்த 21,557 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது எனக் கூறினார்.

Categories

Tech |