Categories
சினிமா

ஜுனியர் என்.டி.ஆர். திரைப்படத்தில்…. ராஷ்மிகாவா?… பூஜா ஹெக்டேவா?…. போட்டி போடும் நடிகைகள்…..!!!!!

ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டதால் அந்த திரைப்படத்தில் நடித்த என்.டி.ஆரின் அடுத்த படம் எதுவாக இருக்கும் எனும் எதிபார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர்களுக்கு ஹிட்கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா திரைப்படத்தில் என்.டி.ஆர் நடிக்க இருக்கிறார். இதில் கொரட்டாலா சிவா இப்போது வெளியாகியுள்ள ஆச்சார்யா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து அடுத்தப் திரைப்படம் பற்றி கொரட்டாலா சிவா பேசியிருக்கிறார். இதுகுறித்து சிவா கூறியதாவது, “என் அடுத்த திரைப்படத்தில் என்.டி.ஆர். நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக முதல்முதலில் ஆலியா பட் நடிப்பதாக இருந்தது. அதன்பின் ஒப்பந்தம் செய்தபின் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் விலகிக் கொண்டார். தற்போது ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே அதில் நடிப்பதற்கு போட்டி போடுகிறார்கள். ஏனெனில் இது பான்இந்தியா திரைப்படமாக வரவுள்ளது. இவர்களில் அதிகபட்சமாக ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது” என கொரட்டாலா சிவா கூறியுள்ளார்.

Categories

Tech |