Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாரத்துல 2 மணி நேரம் தா வேலை….. ஆனா சம்பளம் ரூ2.3 கோடி…. எந்த நிறுவனத்தில தெரியுமா?…..!!!

வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்து ஒருவர் 2.3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தினமும் சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். தினமும் 8 மணி நேரம் வேலை பார்த்து உழைத்து மாதம் ஒருமுறை சம்பளம் வாங்குகிறான். ஆனால் ஒருவர் வாரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து ஆண்டிற்கு 2.3 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

ஹேக்கர் நியூஸ் என்ற வெப்சைட்டில் சமீபத்தில் ஒருவர் தனது வேலை பற்றிய அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கடந்த 3 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவித்தார். ஆரம்பக்காலத்தில் 1.64 லட்சம் அமெரிக்க டாலர் சம்பளத்திற்கு வேலை செய்து வந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த புதிதில் தினமும் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து வந்துள்ளார். அதுவும் தினமும் அவரது டீமுடன் வேலையை பகிர்ந்தளித்து பேச வேண்டியது மட்டும் தான் இவரின் வேலை.

அவர்களிடமிருந்து சரியான நேரத்தில் வேலையை வாங்கவேண்டும். தற்போது இவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இவர் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மீட்டிங் மட்டுமே பங்கேற்கிறார். அதன் மூலம் வாரம் இரண்டு மணி நேரம் மட்டுமே பணியாற்றுகிறார். அமேசான் நிறுவனம் இவருக்கு இந்திய மதிப்பில் 2.3 கோடி பணத்தை ஆண்டிற்கு சம்பளமாக தந்து வருகின்றது. இவரின் பதிவு பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |