Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களில் 100 டிகிரி….. அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மோசமாக இருக்கும்…. மக்களே உஷார்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 110.66 டிகிரி, அரியலூர் மாவட்டத்தில் 108 டிகிரி, திருவள்ளூர் மாவட்டத்தில் 107 டிகிரி,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 107.6 டிகிரி, ராணிப்பேட்டை 106 டிகிரி, வேலூர் 106 டிகிரி, கிருஷ்ணகிரி 105 டிகிரி,  திருச்சி 105 டிகிரி, கடலூர் 104 டிகிரி, விருதுநகர் 104 டிகிரி, மதுரை புதுகை 103 டிகிரி, தர்மபுரி, சேலம் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Categories

Tech |