Categories
மாநில செய்திகள்

இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசில் விரைவில் பதிலளிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்த அவர் அதுவரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தவாரம் அந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளோம் என்று கூறினார். தற்போது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் அதற்கான அதிகாரபூர்வ வழிகாட்டுதல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த உடனே தடுப்பூசி செலுத்த தமிழகம் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |