சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சென்ற 2017 ஆம் வருடம் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இச்செய்தியானது ரசிகர்கள், குடும்பத்தார்கள், திரைபிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
விவாகரத்துக்கு காரணம், சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்ததுதான் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி என்றும் சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடி என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் சமந்தா பிஎம்டபிள்யூ இரண்டு காரும் ஒரு ஜாக்குவார் காரும் வைத்திருக்கின்றார். சமந்தா தற்போது தனது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கின்றார். இதனால்தான் இவர் நாகசைதன்யாவிடமிருந்து ஜீவனாம்சம் கேட்கவில்லை என தெரிகின்றது.