Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருதலைக்காதல்…மாணவிக்கு கத்திக்குத்து…வாலிபரை மின்கம்பத்தில் கயிறால் கட்டி வைத்த பொதுமக்கள்… குன்னூரில் பரபரப்பு…!!!

ஒருதலைக்காதலால் வாலிபர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழ் பள்ளிவாசல் பகுதியில் வசித்த பூ வியாபாரி அப்பாஸ் என்பவருடைய மகன் ஆசிக் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் மாணவி தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது, மாணவியை பின்தொடர்ந்த ஆசிக் திடீரென பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை குத்தினார். இதனால் மாணவி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை அடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கயிற்றை எடுத்து கட்டி வைத்தார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் குன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கத்தியால் குத்தி படுகாயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பின் மாணவியை கத்தியால் குத்தி ஆசிக்கை காவல்துறையினர் கைது செய்து குன்னூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |