ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் இருக்கிறது. ரமலான் மாதம் என்ற காரணத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாட்டு தளத்தில் அதிக அளவிலானோர் வழிபாடு செய்ய குவிந்திருந்தனர்.
சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் அந்த மதவழிபாட்டு தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது யார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஷியா – சன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.