காங்கோவில் தட்டம்மை நோய் தொற்றினால் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்கா நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. கடந்த 24ஆம் தேதி வரை 6,259 பேருக்கு தட்டம்மை நோய் தொற்று பரவியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் சுகாதார மந்திரி கில்பெர்ட் மொகொகி கூறியதாவது “நாட்டின் பொருளாதார தலைநகரான பாய்ண்ட்-நாய்ர் இந்த நோய் தொற்றுக்கான மையமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5,488 பேருக்கு தட்டம்மை நோய் தொற்றுக்கான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் தொற்றினால் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தட்டம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் சிகிச்சை மையங்களுக்கு காலதாமதமுடன் வருவதால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த தட்டம்மையின் அறிகுறியை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் சுகாதார சேவையை வெகுசீக்கிரமாக பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றால் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட இடையூறுகளால் தட்டம்மை நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. இதனை சுட்டி காட்டி கடந்த ஏப்ரல் மாதம் உலக சுகாதார அமைப்பு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த தட்டம்மை நோய் தொற்று ஏற்பட கூடிய ஆபத்துள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.