ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம்தான். அதன்படி மே மாதம் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். சமையல் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்கள் மே 1 ஆம் தேதி முதல் மாறுகின்றன.
புதிய மாற்றங்கள்:
ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் மகிழ்ச்சியாக தொடங்குகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி இறுதி வரை நீடிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் மாத தொடக்கத்தில் சில பொருட்களின் விலை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழலில் ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்குகிறது. இந்த மாதமும் பல பெரிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் சில மாதங்களில் இரண்டு முறை கூட விலை மாற்றம் செய்யப்படும். தேர்தல் முடிந்த பிறகு சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மே ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கடந்த முறை சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கி விடுமுறை:
நீங்கள் அடிக்கடி வங்கிக்கு செல்பவராக இருந்தால் மே மாதம் சற்று மோசமாகத்தான் இருக்கும். ஏனென்றால் மே 1 முதல் 4 வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும். இருந்தாலும் இந்த விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். மே மாத தொடக்கத்தில் தான் நாட்டில் ஈத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுதவிர மே மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை உட்பட மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI கட்டண வரம்பு:
மே 1ம் தேதி முதல் சில்லறை முதலீட்டாளர்களுக்கான UPI கட்டண வரம்பு அதிகரிக்கப்படுகிறது. பங்கு சந்தை ஒழுங்குமுறை வாரியான செபியின் புதிய விதிமுறைப்படி மே 1ஆம் தேதிக்கு பிறகு ஒரு நிறுவனத்தின் ஐபிஓவில் முதலீடு செய்வதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது 5 லட்சம் வரை ஏலத்தை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த வரம்பை 5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மே 1-ம் தேதிக்குப் பிறகு வரும் அனைத்து ஐபிஓக்களுக்கும் புதிய வரம்பு செல்லுபடியாகும்.