Categories
மாநில செய்திகள்

மே-1 இல் இவர்களுக்கு ஊக்கத்தொகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

கடந்த 19ஆம் தேதி தமிழகம் முழுவதுமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  பெருன்பான்மையான இடங்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையாளர் கோகுலகிருஷ்ணன் வார்டு பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் தேவையான வசதிகள் குறித்து முன்வைத்து பேசினார். இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக எடுத்துரைத்தார். மேலும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களை கௌவரவப்படுத்தும் விதமாக நகரமன்ற கூட்டத்திற்காக வழங்கப்பட்ட ஊதிய தொகை தலா 600 ரூபாய் என்று கூறப்படுகின்றது. அதன்படி 12,600 ரூபாய் தொகையை  நகர்மன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். இதனை மே தின நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை கௌவரவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |