இத்தாலி அரசு அரசியல் சாசன கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இத்தாலி நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களின் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும். மேலும் இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து வருகின்றது.
இந்நிலையில் அவ்வாறு அந்த நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால், இனிவரும் காலத்தில் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்த்து கொள்ளுமாறு அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள், பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அரசியல் சாசன நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி நாடாளுமன்றம் தற்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரியான எலினா பொனெட்டி தனது ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார்.