Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே உஷார்…! இதை மட்டும் செய்யாதீங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சமீபகாலமாகவே ஆன்லைன் பணபரிவர்தனைகள் அதிகரிக்க தொடங்கிவிட்ட நிலையில் மோசடிகளும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி செல்போனில் அழைப்பு வருவதாகவும் இதன் வாயிலாக மோசடிக் கும்பல்கள் லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொல்லி கொள்ளை அடிப்பதாகவும் வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே அழைப்பு வந்தால் வாடிக்கையாளர்கள் அதை தவிர்க்க வேண்டும் என்றும், KYC விவரங்கள் கேட்டு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னால் அதை செய்ய வேண்டாம் என்றும் வங்கிகள் சார்பாக அறிவுறுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வந்த எஸ்எம்எஸ்இல் உங்கள் வங்கி கணக்கு இன்று பிளாக் செய்யப்பட உள்ளது. உடனடியாக பான் எண்ணை வங்கி கணக்குடன் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் லிங்கை திறந்து பான் எண்ணை பதிவு செய்தவுடன் அவருடைய கணக்கில் இருந்து ரூ.1,03,500 அபேஸ் செய்யப்பட்டது. எனவே சந்தேகத்திற்கு இடமான எண்ணில் இருந்து வரும் லிங்குகளை திறக்க வேண்டாம் மக்களே.

Categories

Tech |