Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கதீஜாவுக்கு மட்டும் ஸ்கிரீன் ஸ்பேஸ்”… ஆனா அவங்களுக்கு இல்லையே…. விக்கியை விளாசும் நெட்டிசன்ஸ்…!!!!

விக்னேஷ் சிவனை விளாசும் இணையதளவாசிகள்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் சமந்தா பாடல் ஒன்றிற்கு நடனமாடியது மிகவும் ஹிட்டானது. தற்போது சமந்தா பல திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரின் பிறந்த நாளான நேற்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவரின் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து இருந்தார்கள்.

படத்தில் நயன்தாரா கண்மணி வேடத்திலும் சமந்தா கதிஜா வேடத்திலும் நடித்திருந்தார்கள். படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். நேற்று சமந்தாவின் பிறந்தநாளுக்கு இரவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் கதீஜாவுக்கு மட்டுமே ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டதாகவும் நயன்தாராவை விட்டு விட்டதாகவும் விக்னேஷ் சிவனை விமர்சித்து வருகின்றார்கள்.

Categories

Tech |