Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இயங்கிவரும் லோக்கல் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி மும்பையில் ஏசி வசதி கொண்ட லோக்கல் ரயில்களும் இயங்கி வருகிறது. இந்த லோக்கல் ரயில்களில் 5 கிலோ மீட்டருக்கும் குறைவாக 65 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மிக அதிக அளவில் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கட்டணத்தை குறைக்குமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ரயில் கட்டணம் 65 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக குறைக்கப்படுவதாக ரயில்வேத் துறை இணை அமைச்சர் ராவ்சாகேப்‌ தன்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது ரயில் கட்டணம் வழக்கத்தை விட 50% குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் ரயில் கட்டண குறைப்பு எப்போது அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

Categories

Tech |