தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் குறித்த தகவல் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட வேண்டிய பல்வேறு பதவிகள் குறித்து தகுதி பெற்றவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த ஆண்டு உத்தேசமான முன்னோடி கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்க்கண்ட 18 பதவிகளில் 4308 காலிப்பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
பதவிகள் பின்வருமாறு:
- உதவி மருத்துவர் (பொது) – 1021
- உதவி மருத்துவர் (பொது) சிறப்பு தகுதித் தேர்வு -788
- உதவி மருத்துவ அலுவலர் (ஆயுஷ்) – 173
- திறன்மிகு உதவியாளர் நிலை -II (மின்வினைஞர் நிலை II) – 3
- உணவு பாதுகாப்பு அலுவலர் – 119
- கள உதவியாளர் -174
- கிராம சுகாதார செவிலியர் (மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடம்) – 39
- சுகாதார ஆய்வாளர் நிலை – II (ஆண்கள்) – 334
- செவிலியர் (மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடம்) – 88
- மருந்தாளுநர் (ஆயுர்வேதா) – 6
- மருந்தாளுநர் (சித்தா) – 73
- மருந்தாளுநர் (யுனானி) – 2
- மருந்தாளுநர் (ஹோமியோபதி) – 3
- அறுவை அரங்கு உதவியாளர் – 335
- இருட்டறை உதவியாளர் – 209
- இயன்முறை சிகிச்சையாளர் நிலை II – 25
- மருந்தாளுநர் -889
- இளநிலை பகுப்பாய்வாளர் (உணவு பாதுகாப்புத் துறை) 29 ,