Categories
உலக செய்திகள்

மாணவிகள் ஹிஜாப் அணியாததால்…. மூடப்பட்ட பள்ளிகள்…. ஆப்கானில் பரபரப்பு….!!

பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியாததால் தலிபான்கள் பள்ளியை மூடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் பிரச்சனையில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றது. இதனை அடுத்து பள்ளிகளில் மாணவிகளுக்கு கட்டாயமக உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலிபான்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பல்க் மாகாணத்தில் ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் சில நாட்களாக ஹிஜாப் அணியாமல், ஹிஜாப் அணிந்திருந்தால் முகத்தை மூடாமல் வந்திருந்தனர்.

இதனால் இந்தப் பள்ளியை தலிபான்கள் மூடி விட்டதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் எல்லா பள்ளிகளிலும் சரியான முறையில் உடை கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன என்று ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளனர். இந்த விதிமுறைகளை பின்பற்றாத ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை எந்த வித விளக்கமும் கேட்காமல் பள்ளியிலிருந்து நீக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |