Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அருகே வைத்து…. கடும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. பெற்றோர்கள்-ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!

கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி அருகே வைத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதியில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் இரு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு சில நிமிடத்திலேயே மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

இதனை பார்த்த அங்கிருந்த மாணவிகள் அலறியடித்து ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சிலர் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடனடியாக மாணவர்கள் விலக்கிவிட்டு விசாரித்ததில் கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதுபோன்ற பொது இடங்களில் வைத்து மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவர்கள் தாக்கி கொண்டதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரி கீதா இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்தும், அறிவுரை வழங்கிய கல்வித்துறை அதிகாரிகள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |