ரஷ்யா-உக்ரைன் இடையே 68வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து கடந்த 2 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து எந்த நாடு அதிக அளவில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐரோப்பிய நாடான ஜெர்மனி தான் அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.
அதாவது 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை ஜெர்மனி ரஷ்யாவிடமிருந்து பெற்றுள்ளது. அதேபோல் ரஷ்யா, போர் தொடங்கியது முதல் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் மொத்தம் 63 பில்லியன் யூரோ சம்பாதித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இயற்கை எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றை ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்த இரண்டாவது நாடாக இத்தாலி உள்ளது.
அடுத்தபடியாக சீனா இயற்கை எரிவாயு, எரிபொருள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி 6.7 பில்லியன் யூரோ மதிப்பிற்கு கச்சா எண்ணெய், எரிவாயுவை கடந்த 2 மாதத்தில் சீனா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.