Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருமங்கலத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்”…கைது செய்த போலீசார் …!!!!

திருமங்கலம் கிராமத்தில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தார்கள்.

திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி அருகே இருக்கும் திருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் இருக்கும் கூழையாற்றில் இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மகன் ரஞ்சித்குமார் டார்ச் லைட்டை ராமச்சந்திரனின் முகத்தின் மீது அடித்திருக்கின்றார்கள்.

இதனால் ராமச்சந்திரன் இது பற்றி அவர்களிடம் கேட்ட பொழுது ரஞ்சித்குமார் மற்றும் ராமச்சந்திரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் ராமச்சந்திரனையும் அவரது மகன் ஜெகனையும் அரிவாளால் வெட்டி இருக்கின்றார். இதனால் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் மற்றும் ஜெகன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரஞ்சித்குமாரை கைது செய்தார்கள்.

Categories

Tech |