திருநெல்வேலியில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்க, மாவட்ட பொறுப்பாளர் சிம்சன், மாநிலத் துணைத் தலைவர் இசக்கிமுத்து, இணைச்செயலாளர் வானமாமலை, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் ஆசீர் ஜெபராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் முத்துகுட்டி, பிரசார செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் பலர் பங்கேற்றார்கள்