Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா….! இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா….. பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்…..!!!!

பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடு வழக்கத்திற்கு மாறாக சத்தம் போட்டது. இதைக் கேட்ட உரிமையாளர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போதும் பசுமாட்டுடன் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் கூச்சலிடவே, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபர் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாட்டின் உரிமையாளர் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த மாட்டுடன் உடலுறவு கொண்ட நபரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டப்பட்ட நபரை தீவிரமாக தேடி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மனிதர்கள் விலங்குகளுடன் இயற்கை மாறாக உடலுறவு கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Categories

Tech |