பீஜிங்கில் கொரோனா வைரஸுக்கு புதிதாக 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரே நாளில் கொரோனா வைரஸின் பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் ஷாங்காய் நகரை தொடர்ந்து பீஜிங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பீஜிங்கில் ஏறத்தாழ 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 46 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்நகரில் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற அச்சத்தில் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பொதுமக்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பு வைக்கப்படுவதை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.