குடியுரிமை திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக எல்லையான களியக்காவிளை முதல் கேரளா கர்நாடக எல்லையான காசர்கோடு வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசினுடைய குடிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே கேரள அரசு சார்பில் இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தற்போது கேரள ஜனநாயக முன்னணி ஆளுகின்ற மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து,
இன்று தமிழக கேரள எல்லையான களியக்காவிளை முதல் கர்நாடகா கேரளா எல்லையானகாசர்கோடு பகுதிவரை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் திரைப்படத்துறையை சேர்ந்த பிரபல கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.