மாணவியை மானபங்கம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் காந்தி என்பவரின் 19 வயதுடைய மகன் பவன்குமார். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய அக்கா கால்பந்தாட்ட வீராங்கனை. இவரின் அக்காவுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனையான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் விளையாட்டு போட்டிகளின் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தோழிகளாக உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்கள்.
பின் பவன்குமார் அந்த மாணவிக்கு அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியை பனப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் வீட்டிற்கு வரவழைத்து மானபங்கம் செய்து இருக்கின்றார். இதனால் மாணவியின் தந்தை போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவன் குமாரை தேடி வந்த நிலையில் போளூர் நடுப்பகுதியில் இருந்த பவன் குமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் போக்சோ சட்டத்தில் அவனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.