Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உலக அமைதிக்கு…. சைக்கிளில் சுற்று பயணம் செய்யும் தம்பதினர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!

உலக அமைதிக்காக கணவன்-மனைவி இருவரும் சைக்கிளில் பொதுநல பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பங்களா பகுதியை சேர்ந்த கருப்பையா (51) என்பவர் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (53) இவரும் அதே இயக்கத்தின் மகளிர் பிரிவு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் பொது நோக்கத்திற்காக இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாளர் என்ற விருதையும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பொதுநல பயணத்தை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் சித்ராவால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மூன்று சக்கர சைக்கிளில் தனது கணவருடன் பொதுநல பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது இந்த தம்பதியின் உலகில் அமைதி, சமாதானம் மற்றும் ஒற்றுமை நிரந்தரமாக நிலவவேண்டும் எனவும், உலக நாடுகள் போர் இல்லாமல் இருக்கவும் கோவை மாவட்டத்திலிருந்து தங்களது பயணத்தை தொடங்கி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆரோவில் வரை பயணம் செய்து வருகின்றனர். மேலும் கடந்த 12-ம் தேதி தொடங்கிய இந்த பயணம் வருகின்ற மே மாதம் 21-ம் தேதி வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |