Categories
பல்சுவை

சொந்தமா தொழில் செய்ய ஆசையா…..? இதோ சூப்பர் திட்டம்…. பயன்படுத்திகோங்க…..!!!!

சொந்தமாக தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. நீங்கள் இந்த தொழிலை வெறும் ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கினால் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். பலரும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஒரு இடத்தில் கையை காட்டி வேலை பார்த்து கைநீட்டி சம்பளம் வாங்குவதை விட தானே ஒரு முதலாளியாகி மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று விரும்பினால் அதற்கு இந்த வியாபாரம் ஒரு சிறந்த தேர்வு. இதற்காக அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.

வெள்ளரி சாகுபடியில் லாபம் ஈட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை. விதைப்பு தொடங்கி நான்கு மாதங்களில் 8 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இதற்கு நீங்கள் புதிய முறையில் விவசாயம் செய்ய வேண்டும்.  நெதர்லாந்தில் இருந்து கிடைக்கும் வெள்ளரி வகை அதிக மகசூல் தருகிறது. முதலில் இந்த தொழிலுக்கு அரசிடமிருந்து மானியம் வாங்க வேண்டும். இந்த வெள்ளரி சாகுபடி செய்ய 60 முதல் 80 நாட்கள் ஆகும். மழைக்காலத்தில் இதன் சாகுபடி அதிகரிக்கும். இதன் அளவானது 5.5 முதல் 6.8 வரை இருந்தால் மிகவும் நல்லது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதில் விதைகள் குறைவாக இருக்கும். இதன் விலை நாட்டு வெள்ளரியின் விலையை விட அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நெதர்லாந்தின் விதைகள் கொண்ட இந்த வெள்ளரி கிலோ ரூ 40 முதல் 45 வரை விற்பனையாகி வருகிறது. இந்த தொழில் செய்வதற்கு முதலில் ஒரு செட்நெட் வீட்டை சுற்றி உருவாக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகிலேயோ அல்லது உங்களின் விவசாய நிலத்திலோ இதை தொடங்கலாம். அதன்பிறகு நெதர்லாந்திலிருந்து 72,000  ரூபாய் மதிப்புள்ள விதைகளை வாங்க வேண்டும். விதையை விதைத்து 4 மாதத்தில் 8 லட்சம் மதிப்பிலான வெள்ளரிகளை  உங்களால் விற்பனை செய்ய முடியும். இதுபோல பலரும் செய்து லாபம் ஈட்டி உள்ளனர். நீங்களும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினால் இது ஒரு சிறந்த வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்…

Categories

Tech |