தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த 6 வருடத்திற்கு முன் தனது வீட்டின் பின்புறத்தில் அதிசயமான நிகழ்வு ஒன்று பார்த்துள்ளார். அதாவது தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு செடி தானாவே சுற்றியுள்ளது. அதனை பார்த்த அவர் பொதுமக்கள் அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த அதிசய நிகழ்வை பார்த்த பொதுமக்கள் அதனை கடவுளாக நினைத்து வழிபட தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக புவியியல் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தபோது. அவர்கள் கூறியதாவது “இது கடவுள் இல்லை. சயின்ஸ். ஒரு செடி வலுப்பெறுவதற்கு அது உடைய வேர்கள் ஆழமாக செல்லம். அப்போது அதை சுற்றியுள்ள மணல்கள் இறுக்கமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் செடி ஆடத்தான் செய்யும். மேலும் அந்த இடத்தில் தண்ணீர் இருந்தால் கூட அது ஆடுவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளனர்