Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. திடீர் திருப்பம்…. மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. முன்னதாக குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்துப் பாடங்களிலிருந்தும் கேள்விகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்ட விபரங்கள் அனைத்தும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு உள்ளது.

Categories

Tech |