மின்சார வாகனங்கள் விபத்து ஏற்படுவதற்கு அதிகபட்ச வெப்பநிலை தான் காரணம் என போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிகிற சம்பவங்களை நாம் பார்க்கிறோம். இதில் பலருக்கு காயங்கள் மற்றும் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வருடம் தோறும் ‘ரைசினா டயலாக்’ என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் பலதரப்பட்ட மாநாட்டில் நேற்று மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு எலக்ட்ரிக் பேட்டரி வாகன விபத்து பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில் ” எலக்ட்ரிக் பைக்கை அரசு பிரபலப்படுத்த விரும்புகிறது. மேலும் இந்தியாவில் இப்போதுதான் மின்சார வாகன தொழில் துறை தொடங்கியிருக்கிறது என்பதை நான் ஏற்கிறேன். இதனால் அரசு அவர்களுக்கு தடைகளை ஏற்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் பாதுகாப்பு என்பது அரசின் மிக உயர்ந்த கடமை ஆகும். மனித உயிர்களை பொருத்தமட்டில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.
இது மட்டுமின்றி மின்சார பேட்டரிகளில்பிரச்சனைகள் ஏற்படுவதற்கும், வாகனங்கள் தீ பிடித்து எறிவதற்கும் இந்தியாவில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்படுகிற அதிகபட்ச வெப்பநிலை தான் காரணம் என்று நான் கருதுகிறேன். மேலும் குறைபாடற்ற வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற நடிகைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.