சீன நாட்டில் H3N8 என்ற வகை பறவை காய்ச்சலால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது.
சீனாவில் H3N8 என்ற பறவை காய்ச்சல் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அச்சிறுவனுக்கு காய்ச்சல் போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, Henan என்ற மாகாணத்தில் வசிக்கும் 4 வயது சிறுவனுக்கு H3N8 என்ற பறவை காய்ச்சல் உறுதியாகியிருக்கிறது.
இந்த பறவை காய்ச்சல் மக்களிடையே பரவக்கூடிய ஆபத்து குறைவாக உள்ளது. அந்த சிறுவனின் வீட்டில் கோழிகள் மற்றும் காகங்கள் வளர்க்கப்படுகிறது. இந்த வைரஸிற்கு மனிதர்களிடையே அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் இல்லை. மேலும், அதிக அளவில் தொற்று ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.