அமெரிக்க நாட்டின் துணை அதிபராக கமலா ஹாரிஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அங்கு தொற்று எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக குறைந்து விட்டது. இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு கொரோனோவிற்கான அறிகுறிகள் இல்லை எனவும் அவர் அதிபர் ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை எனவும் வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், கொரோனா வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை கடைபிடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டதுடன் பூஸ்டர் தவணையும் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.