Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்…. CEO பராக் அகர்வால் ஆதங்கம்….!!!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியிருப்பதால் அந்நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமில்லாமல் இருக்கிறது என்று தலைமை செயல் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உலகின் பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்கும் ட்விட்டர் நிறுவனத்தின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று விமர்சித்து வந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் அந்நிறுவனத்தின் 9.1% பங்குகளை வாங்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தை மொத்தமாக 43 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் ட்விட்டர் நிறுவனம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. அதன் பின்பு அந்நிறுவனம் தன் முடிவை மாற்றிக் கொண்டு எலான் மஸ்க்குடன் கடந்த திங்கட்கிழமையன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டது. அதனைத்தொடர்ந்து எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை மொத்தமாக 44 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய நிறுவனம் ஒத்துக் கொண்டது.

ட்விட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்கிடம் கைமாறவுள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் கூறியிருப்பதாவது, சமூக ஊடக நிறுவனத்தினுடைய வருங்காலம் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. ட்விட்டர் கைமாறும் போது, அது எங்கு செல்லும் என்பது தங்களுக்கு தெரியாது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Categories

Tech |