Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. இந்த பிரச்சனை இருந்தா உடனே போன் பண்ணுங்க…. நோட் பண்ணிக்கோங்க….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக நலிவடைந்த மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டை மூலம் அரசு பல்வேறு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாகவும்,கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருந்தால் அல்லது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் 044-28583222 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே இனி உங்கள் ரேஷன் கடைகளில் ஏதாவது குறை இருந்தால் நீங்கள் நேரடியாகவே அரசிடம் புகார் கூறலாம்.

Categories

Tech |