Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனநலம் பாதிக்கப்பட்டு வந்த பெண்…. குணப்படுத்தி அனுப்பிய அதிகாரிகள்…. நெகிழவைத்த சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்டு வழிதவறி வந்த வடமாநில இளம்பெண்ணை குணப்படுத்தி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு பாதுகாப்பாக வாலாஜா அரசு மனநல மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு பழைய நினைவு திரும்பியுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோதி என்பதும், ரயில் மூலம் பயணம் செய்து ராணிப்பேட்டைக்கு வழிதவறி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராணிப்பேட்டைக்கு வரவழைத்தனர். இதற்குப்பின் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் அந்த பெண்ணை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். அப்போது மாவட்ட வருவாய் ஆய்வாளர் குமரேஷ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், வாலாஜா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா நந்தினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் லட்சுமணன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

Categories

Tech |