விடுமுறை தினத்தையொட்டி தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.