Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுக்கும் காதலன்”… இளம்பெண் தர்ணா போராட்டம்…!!!!

திருமணம் செய்ய மறுத்து நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக காதலன் வீட்டு முன்பு பெற்றோருடன் காதலி தர்ணாவில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் திருவிடைமருதூர் கீழப்பட்டக்கால் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன் என்பவரின் மகள் ராதிகா. இவர் பட்டதாரி ஆவார். ராதிகா கும்பகோணத்தில் இருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த போது அங்கு வேலை பார்த்து வந்த திருவிடைமருதூர் பள்ளிவாசல் தெருவில் வாழ்ந்து வரும் முகனத்  என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராதிகா புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்  முகனத் என்பவர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் அவரின் நண்பர்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதனால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த சிலநாட்களிலேயே ஜாமீன் மூலம் வெளிவந்தார். இதனால் ராதிகா திடீரென திருவிடைமருதூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள முகனத்தின் வீட்டின் முன்பு பெற்றோர் மற்றும் சகோதரருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதிகாவிடம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள். அதன் பின் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இச்சம்பவம் குறித்து ராதிகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, முகனத் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்து நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். முகனத் தாய் மும்தாஜ், ராதிகா மற்றும் அவரின் குடும்பத்தார்கள் தங்களை மிரட்டுவதாக கூறினார். இதனால் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |