Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன ஒரு தைரியம்?…. உண்டியலை அலேக்காக தூக்கிய வாலிபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெட்டாங்கோட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும்  பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த  இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் உண்டியலை திருடிய மர்ம நபர் உண்டியலில் இருந்த  பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அருகில் இருந்த புதரில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உண்டியலை உடைத்து  பணம் திருடி சென்ற  மர்ம நபர்  குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |