தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் தபால் துறையின் சேவைகளைப் பயன்படுத்தலாம். போஸ்ட் ஆபீஸ் இன்டர்நெட் பேங்கிங் சேமிப்புக் கணக்குக்கு இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடியது ஆகும். அதேபோன்று இதன் வாயிலாக உங்கள் PPF மற்றும் SSY கணக்குகளிலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆகவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தப்படியே செய்யமுடியும். ஒரு வேளை நீங்கள் இதுவரையிலும் இன்டர்நெட் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்யவில்லை எனில், அதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
இந்தியா போஸ்ட் இன்டர்நெட் பேங்கிங்கிற்கு எவ்வாறு பதிவு செய்வது..?
# முதலில் அருகில் உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று படிவத்தை நிரப்ப வேண்டும். (48 மணி நேரத்துக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS எச்சரிக்கையைப் பெறுவீர்கள்)
# பின் நீங்கள் SMS-ஐ பெற்றதும் DOP இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டலுக்குச் சென்று முகப்புப் பக்கத்திலுள்ள “புது பயனர் செயல்படுத்தல்” ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்ய வேண்டும்.
# வாடிக்கையாளர் ஐடி மற்றும் கணக்கு ஐடியை உள்ளிட வேண்டும். (வாடிக்கையாளர் ஐடி என்பது சேமிப்பு கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ள CIF ஐடி ஆகும்.
# தேவையான தகவலை நிரப்பி உங்களது இணைய வங்கி உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை கடவுச் சொற்களை அமைக்க வேண்டும்.
# உள் நுழைவு மற்றும் பரிவர்த்தனை கடவுச் சொற்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
# தற்போது உள்நுழைந்து உங்களது பாதுகாப்பு கேள்விகள், பதில்கள் மற்றும் உங்கள் கடவுச்சொல்லை அமைக்க வேண்டும்.
மொபைல் பேங்கிங்கை செயல்படுத்துவது எப்படி..?
மொபைல் வங்கி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தியா போஸ்ட் இணையத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் அடிப்படையில் DoP மொபைல் பேங்கிங்கிற்குப் பதிவுசெய்த பின், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங் செயலியைப் பதிவிறக்கம் செய்து, மொபைல் பேங்கிங்கைச் செயல்படுத்து விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
# கூகுள் பிளே ஸ்டோரிலில் இருந்து மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனைப் பதிவிறக்க வேண்டும்.
# ஆக்டிவேட் மொபைல் பேங்கிங் டேப்பில் கிளிக் செய்ய வேண்டும்.
# பாதுகாப்புச் சான்றுகளை உள்ளிட்டு, பின் OTP-ஐ உள்ளிட வேண்டும்.
# உங்களது செயல்படுத்தல் அங்கீகரிக்கப்பட்ட பின், நீங்கள் mpin-ஐ பதிவுசெய்ய வேண்டும்.
தற்போது நீங்கள் மொபைல் பேங்கிங்கை எளிமையாக பயன்படுத்தலாம்.