Categories
தேசிய செய்திகள்

பெண்களே!…. அரசின் கடனுதவிகளை பெறுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பாக்கலாம்…..!!!!!

பணிக்கு போகும் பெண்களாக இருக்கட்டும், சுயத்தொழில் செய்யும் பெண்களாக இருக்கட்டும் அவர்கள் தொழில் சார்ந்து அடுத்தக்கட்டத்திற்கு நகர, அரசு சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்படுகிறது. அதேபோன்று அரசு வங்கிகளும் அவர்களுக்கு கடன் கொடுக்க முன் வருகிறது. எனினும் பல பேரும்  இதுகுறித்த புரிதல்கள் இன்றி இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடுகின்றனர். மேலும் வட்டி அதிகமாகவுள்ள கடனில் சென்று சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் உண்மையில் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் முன்னேற்றத்தில் அதிகமான அக்கறை கொண்டு பல்வேறு உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அதனை யாரெல்லம் பெற முடியும்..? எப்படி விண்ணப்பிப்பது..? ஆகிய விபரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உத்யோகினி 

இக்கடனை பெண்கள் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். விவசாயம் மற்றும் சிறு, குறு வணிக நிறுவனங்களை நடத்தும் பெண்கள் இக்கடனை பெற தகுதியுடையவர்கள் ஆவர். 18 -45 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சம் வரை உத்யோகினி திட்டத்தில் கடன் பெறலாம்.

அன்னபூரணா

கேட்டரிங் துறையை சார்ந்த பெண் தொழில் முனைவோர்கள் இக்கடனை பெற முடியும். மைசூர் மாநில வங்கியில் இந்த கடனை பெற்றுக்கொண்டு 36 மாதங்களுக்கு மாத தவணையில் கடனை அடைக்கலாம்.

பிரதான் மந்திரி முத்ரா

முத்ரா என்ற அமைப்பின் வாயிலாக இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்கள் தங்களளுடைய  தொழில் முன்னேற்றத்துக்காக ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை கடன் தொகை பெற்றுக்கொள்ளலாம். அதன்பின் 11 வருடங்கள் வரையிலும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத் தவணையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

சென்ட் கல்யாணி

சென்ட்ரல் பேங்க்ஆப் இந்தியா வங்கி இக்கடனை வழங்குகிறது. இத்திட்டத்தில் அதிகபட்ச கடன் தொகை ரூபாய் 1 கோடி ஆகும். இந்த திட்டத்தில் கடனுக்கான செயலாக்க கட்டணம் இல்லை. இது  கூடுதல் விபரங்களுக்கு வங்கியை தொடர்புக் கொண்டு கேட்டு அறியலாம்.

Categories

Tech |