1971 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு ஒரு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் ரேம்ஹம்பேர் என்ற ஒருவர் பயணித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு ஜென்டில்மேன் போல் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தன்னுடன் எடுத்து வந்த ஒரு சிறிய பேப்பரை எடுத்து ஏதோ எழுதி விமானப் பணிப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதனை விமான பணிப்பெண் உதாசீனப்படுத்திவிட்டு சென்றுள்ளார். மறுபடியும் அந்த பணிப்பெண்ணை அழைத்து இந்த பேப்பரை பிரித்து படிக்குமாறு கூறியிருக்கிறார். அப்படி படிக்க வில்லை என்றால் இது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் கூறியிருக்கிறார்.
அதன்பின் அந்த விமான பணிப்பெண் பேப்பரை பிரித்து படித்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது”நான் கையில் எடுத்து வந்த சூட்கேசில் ஒரு பாம் இருக்கிறது. நான் சொல்லுவதை நீங்கள் கேட்கவில்லை என்றால் இதை வெடிக்க செய்துவிடுவேன். மேலும் விமானம் தரை இறங்கியவுடன் எனக்கு 2 லட்சம் டாலர் பணம் கொடுக்க வேண்டும். அதனுடன் 4 பாராஷூட்களும் தப்பித்துப் போவதற்கு ஒரு ஆயில் டிரக் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதனை அறிந்த அந்நாட்டு அரசு அவர் கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளது. ஆனால் அவரோ அந்த ட்ரக் சாவியை தூக்கிப் போட்டுவிட்டு விமானத்தில் இருக்கும் விமானியை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சொல்லுமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழியில்லாமல் விமானியும் விமானத்தை இயக்க தொடங்கியுள்ளார். இதனையடுத்து விமானம் 4 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவர் பணம் மட்டும் பாராசூட் உடன் கீழே குதித்துள்ளார். அன்று தான் இவரை அனைவரும் கடைசியாக பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு பிறகு இன்று வரையிலும் அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மேலும் இவர் செய்ததுதான் இதுவரையில் நடந்த flight hijack-ல் மிகப்பெரியது.