உலகிலுள்ள 500க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கோடீஸ்வரர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஷயங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பார்த்ததில் அனைவரும் ஒருமித்தமாக கூறிய 10 வெற்றி வார்த்தைகள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
1. கவனம் செலுத்துதல்- சாதாரண மக்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் பிரச்சனைகளை பார்க்கும்போது இறுதியில் அந்த விஷயத்தை கைவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் பல விஷயங்களை தேர்ந்தெடுத்தாலும் அவை அனைத்திலும் தனித்தனியாக முழு கவனத்தையும் செலுத்தி அதனை முடித்த பிறகு அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.
2. பெரியதாக எண்ணுதல்- எந்த ஒரு சிறிய செயலுக்கும் அவர்களுடைய முயற்சியை மிகப்பெரியதாக வைக்கிறார்கள் மிகப்பெரியதாக எண்ணுகிறார்கள்.
3. கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்- பள்ளி மற்றும் கல்லூரி சென்று மீண்டும் படியுங்கள் என்று இவர்கள் சொல்ல வில்லை. தினமும் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக் கொண்டே இருங்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் கற்றுக் கொள்ள நினைக்கும் அனைத்தும் பணத்திற்காக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.
4. கற்றுக் கொடுப்பதை விரும்புகிறார்கள்- கோடீஸ்வரர்கள் கற்றுக் கொள்ள விரும்புவது சமமாக கற்பிக்கவும் விரும்புகிறார்கள். பல கோடீஸ்வரர்கள் அவர்கள் அறிந்தவற்றை பலருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் அவர்கள் ஏற்கனவே தெரிந்தவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.
5. உடனடி நடவடிக்கை- ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டால் அதனை தள்ளி தள்ளி போடாமல் உடனே செய்து முடிக்க வேண்டும்.
6- அணிகளை உருவாக்குதல்- ஒரு அணி இல்லாமல் ஒரு பணக்காரர் உருவாகுதல் என்பது அரிது. ஒரு செயலுக்கான நம்பிக்கையை ஒரு குழுவிலிருந்து மட்டுமே உருவாக்க முடியும். நம்பிக்கையுடன் ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.
7. செலவும், முதலீடும்- சேமித்த பணத்தை வைத்து தேவையற்ற பொருள்களை நாம் வாங்கிக் கொண்டே இருந்தால் விரைவில் நமக்கு தேவையான பொருள்களை விற்க வேண்டியிருக்கும். ஆகவே அளவு சிறியதாக முதலீடு பெரியதாக இருக்க வேண்டும்.
8. தாராள மனம்- அதிகமாக சேமித்த பணத்தை அவர்களே அனுபவிக்காமல் தானங்கள் மூலம் தாராள மனதுடன் அதனை பகிர்ந்து கொள்கிறார்கள்.
9. தோல்வி பயம்- தோல்விகளைக் கண்டு பயம் கொள்ளாமல் தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்று உறுதியாக நம்புகிறார்கள்.
10. தலைவர்கள்- இவர்கள் தாங்கள் ஒரு தலைவன் என்று ஒருநாளும் எண்ணுவதில்லை. முதலாளி என்ற எண்ணத்தில் இல்லாமல் என்றும் நாம் தொழிலாளி என்கிற மனப்போக்கு வைக்கிறார்கள். இதனாலேயே அனைவரும் வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். எனவே அனைவரும் இந்த பத்து விஷயங்களை கவனித்து இதனை தங்கள் வாழ்வில் பின்பற்றினால் நீங்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம்.