இலங்கை மக்களின் அவல நிலை பற்றி டி.ராஜேந்தர் பாடிய ஆல்பம் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான டி.ராஜேந்தர் தற்போது இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் அஷ்மின் எழுதியுள்ளார். மேலும் ஜெ.சமீல் இசையமைத்துள்ளார். நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க எனும் நெஞ்சை உருக்கும் பாடல் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி ராஜேந்தர் கூறியுள்ளதாவது, இலங்கை மக்கள் படும் கஷ்டத்திற்காக மத்திய அரசு இந்தியா சார்பாக 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதற்கு நன்றி.
இலங்கையில் போராடும் மக்கள் படும் கஷ்டத்தையும் வலியையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலை பாடியிருக்கின்றேன். இலங்கை மக்கள் படும் துயரங்கள் நீங்க வேண்டும். முல்லிவாய்க்கால கொடுமைக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைக்குமான பதிலடியை ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார். கர்மா எப்போதும் சும்மா விடாது. என் தமிழ் மக்களுக்கு, இலங்கை மக்களுக்கு உலகம் உதவ வேண்டும். இந்த பாடலை அனைவரும் பகிர வேண்டும் என கேட்டுக் கொள்வதாக” கூறியுள்ளார்.