Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரயில் நிலையங்கள் தாக்கி அழிப்பு…. 5 நபர்கள் உயிரிழப்பு….!!!

உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசு 322 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கும் வகையில் ரஷ்யப் படை, உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து உக்ரைன் நாட்டின் Kozyatyn , Zhmerynka ஆகிய இரு நகரங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் 18 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |