Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிள்ளைகளின் கண் முன்னே…. தாய் செய்த விபரீத செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பிள்ளைகளின் கண் முன்னே தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தென்னதோப்பு வட்டம் பகுதியில் பெருமாள்(30) என்பவர் வசித்து வருகிறார். மேஸ்திரியான இவருக்கு நதியா என்ற மனைவியும்(28), நிசானி(6), ரேணுகா தேவி(5) மற்றும் 5 மாதத்தில் யாஷ்வினி எந௩ மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நதியாவிற்கும் பெருமாளின் அண்ணன் மனைவி அம்பிகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அம்பிகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அம்பிகா மீண்டும் வீட்டிற்கு வந்த பொது மறுபடியும் நதியாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரமடைந்த நதியா தனது 3 மகள்களையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு கொண்டார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதால் நதியாவின் கணவர் மற்றும் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது நதியா வீட்டிற்குள் சேலையால் தூக்கில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக கதவை உடைத்து நதியாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நதியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து நதியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |