திரைப்படத் துறையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி பாராட்டப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹிந்தி திரைப்படத் துறையில் பிரபலமான நடிகை கங்கனா ரணாவத் , இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகிய மூவருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா அதன்பின் ஹிந்தி திரைப்படத் துறையில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி‘ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.
பத்ம ஸ்ரீ விருது குறித்து நடிகைக் கங்கனா கூறுகையில், நான் மிகவும் பிரபலமாக்கப் பட்டுள்ளேன். என்னை அங்கீகரித்த தாய்நாட்டிற்கு நன்றி. தங்களது கனவுகளை எண்ணி பயத்தில் இருக்கும்
அனைத்து பெண்களுக்கும்…..
ஒவ்வொரு மகளுக்கும் …..
ஒவ்வொரு தாய்க்கும் …. மற்றும்
நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களின் கனவுகளுக்கும்….
இந்த விருதை சமர்பிக்கிறேன் என்றார்.