Categories
தேசிய செய்திகள்

அசாமில் குண்டுவெடிப்பு – அச்சத்தில் மக்கள்

அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடையில் இன்று காலை திடீரென்று குண்டுவெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாட்டில் 71 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று காலை எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 37 சாலையின் அருகே உள்ள கடை ஒன்றில் திடீர் என்று குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் போல அதே பகுதியில் உள்ள குருத்வாரா எனும் இடத்திற்கு அருகிலும் குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புகளில் உயிர்சேதம் எதுவும் இல்லை என தகவல் உள்ளது.

குண்டு வெடிப்பு பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |