அவினாசி பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பழைய பேருந்து நிலையம் எதிரே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அந்த இடத்தில் மூன்று பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நிலையில் போலீசார் அவர்களை நெருங்கும்போது தப்பிக்க முயன்றார்கள.
ஆனால் போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், சரவணன் என்பது தெரியவந்தது. இவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சாவை 75 ஆயிரத்திற்கு வாங்கியது தெரியவந்தன.
இதுபோலவே அவிநாசி மங்கலம்ரோடு பகுதியில் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரும் சாந்தி என்பவரும் 15 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களிடமிருந்த 15 கிலோ கஞ்சா மற்றும் 3 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள இருபத்தி ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள். மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.