Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. மின் கட்டணமும் உயர போகுது?….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கோடைகாலத்தில் மக்கள் பெரும்பாலும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவார்கள் வீடுகளில், அலுவலகங்களில் என அனைத்திலும் fan மற்றும் ஏசி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணமும் தொடர்ந்து அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஏப்ரல்,  மே, ஜூன் போன்ற மாதங்களில் மட்டும் மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தற்போது மின் உற்பத்தி குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருகின்றது. இதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நாட்டின் மின்சார தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் 3 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு நிலக்கரி தட்டுப்பாடு தான் முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றார். கோடை காலத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் மின் தேவையானது 15 சதவீதம் அதிகரிக்கும். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவுக்கும் குறைவாகவே நிலக்கரி இருப்பில் உள்ளது.

இதனால் நாடு முழுவதும் தற்போது கடும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகின்றது. நிலக்கரி இருப்பு இல்லாததால் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இதை சமாளிப்பதற்காக மாநில அரசுகள் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற விலை உயர்வால் மக்கள் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வரும், நிலையில் தற்போது மின் கட்டணம் உயர போகிறது என்ற தகவல் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Categories

Tech |